தொலைந்துபோன தூயவளுக்காக

உள்ளத்தாலே ஒன்றுபட்ட நாம் சாதி வெறியாலே இரண்டாகப் பிரிக்கப்பட்டோம்.
பிரிந்த பின்பு நான் வாழ்கிறேன் உன் நினைவுகளின் சக்தியால்.
எந்த பெண் என்னை காதலிப்பதாக சொன்னாலும் நீயே நினைவில் இருக்கிறாய்.
மாற வழியில்லை. மாற்றவும் முடியவில்லை.

என்னை விரும்புவோரைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் மனதிலே இருந்தாலும்,
அவர்களை விட்டுத் தூரமாக விலகிப் போய்விடுகிறேன் உன் நினைவால்.

இத்தனை ஆண்டுகள் கரைந்த பின்பும் உன் நினைவுகள் இன்னும் கரையவில்லை,
உன் மனதில் ஒரு ஓரத்திலாவது நான் இருப்பேனானு கூட தெரியவில்லை,
நெஞ்சுக்குள்ளே அமில மழை.
ஏற்படும் வலியை எங்கே சொல்ல.

உன் நினைவுகளை அடக்கி அடக்கி வைத்தேன் நானும்,
ஆனால், தினம் ஏதோ ஒன்று ஞாபகப்படுத்தும்,
கண்களில் நீர்வழிய நான் அழுத நாட்களும் உண்டு,
வேதனையால் மனதை கல்லாக்கி வெறுத்த நாட்களும் உண்டு.

என் இயக்கமாய் நீ, தூண்டி விளையாடுகிறாய் நீ,
உன்னிடம் பகிர்ந்த காதலை யாரிடம் பகிர மனம் வரவில்லை.
உன் மீது நான் கொண்ட நேசிப்பை வேறு எவரிடத்தும் கொள்ள முடியவில்லை.
நீ இல்லா வாழ்வில்.
காண்பதெல்லாம் மாயை.
கேட்பதெல்லாம் மாயை.
நுகர்வதெல்லாம் மாயை.
ஆயினும் பசிக்கிறது சாப்பிட்டுவிட்டு உன்னை பாடுகிறேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jun-18, 9:19 am)
பார்வை : 1496

மேலே