உயிருள்ளவை பற்றி உயிரெழுத்துக்கள் வரிசையில்

மழலையர் பாடல்......(அறிவியல்)

உயிருள்ளவை பற்றி உயிரெழுத்துக்கள் வரிசையில்....

அனைத்து உயிர்களும் செல்லால் ஆனவை
ஆக்சிஜன் அவற்றிர்க்கு சுவாசிக்கத் தேவை

இயற்கை தாவரங்களில் உள்ளது பச்சையம்
ஈகொசு வண்டு எறும்புகள் பூச்சியினம்

உண்பதும் உறங்குவதும் உயிர்களின் இயல்பு
ஊர்வதும் நகர்வதும் அவற்றின் சிறப்பு

எங்கும் பறந்து திரியும் பறவைகள்
ஏதுவான சூழலில் ஈனும் முட்டைகள்

ஐவகை முறைகளில் விதைகள் பரவிடும்
அதுவே தாவரயினம் அழியாமல் காத்திடும்

ஒட்டகத்துக்கு பாலைவனம் வாழிடம்
ஓடுகள் நத்தை ஆமைக்கு புகலிடம்

ஔவுதல் நாலுகால் விலங்குகள் பண்பு
அஃதை காப்பதே மனிதர்க்கு மாண்பு!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (21-Jun-18, 1:29 pm)
பார்வை : 56

மேலே