கவி அகரம்

என் கருவிழி ஊடே எனக்கு காதல் காய்ச்சல் தந்தவளே - நீ
நகர்வலம் உலா வரும் நிலவோ, நிழல்தனில் சுகம் தரும் மரமோ, மணம் தர மகிழ்வுறும் மலரோ, இருள் அதில் குளிர் தரும் இரவோ,

உன் அங்கங்கள் அசைவதனைக் கண்டு என் அண்டங்கள் அசைவற்று நிற்பதேனோ...!

சரணமும் பல்லவியும் தேடி, உனதழகு வழி வார்த்தைகள் நாடி, சில வரிகள் எழுத நினைத்தேன் , எனையும் காதல் கவிதை எழுத பணித்தாயே...!

எழுதியவர் : பாலகுமார் (21-Jun-18, 1:29 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : kavi akaram
பார்வை : 339

சிறந்த கவிதைகள்

மேலே