மோதலுக்கு திறவாதக் கதவு

எங்கிருந்தோ கதைக்கின்றாய்
இதய ஸ்வரங்களில் சதைக்கின்றாய்
ஆரோகணமாய் அவரோகணமாய்
அடிமனதை வருடி வதைக்கின்றாய்

தொலைவிருந்து நீ பொழிந்த நேசக்குழை
துளிர்களில் உதிர்ந்த தூவான மழை-உன்
குரலதிர்வில் இசைந்த கைபேசி
சுகமான சுமையாகி சிலிர்த்தது ஆவி

நேற்றைய தூறலில் இன்று முளைத்த
வேர்பற்றா ஒற்றைக் காளான் நீ- ஏனோ
ஆலவிருட்சமாய் ஆதாரம் தொற்றி
ஆலிங்கனம் செய்திட அண்டுகிறாய்

பெண்டகையென் அகழ்வறையை சீண்டாதே
முண்டும் பனிப்புகையால் தூண்டாதே- இது
கண்டகக் காவல் கோட்டைச் சுவரு
வண்டலர் மோதலுக்கு திறவாதக் கதவு!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (21-Jun-18, 1:30 pm)
பார்வை : 70

மேலே