எனது தமிழகமே
தமிழினத்தின் தன்மானம் சூழ்ச்சிகளுக்கு உடன்பட மறுக்கிறது...
அதிகாரக் கரங்கள் அழுத்தினாலும் தமிழகம் உரிமையை விட்டுத் தர மறுக்கிறது...
விஷம் கக்கும் முதலீடுகளுக்கு தமிழகம் போராட்டத்தை முன்வைக்கிறது...
பாரம்பரியத்தில் அந்நியன் நுழையும்பொது தமிழகம் ஒன்றுபட்டு எதிர்க்கிறது...
வீரியமற்ற ஆளுமைகளை தமிழகம் பாரபட்சமில்லாமல் விமர்சிக்கிறது...
தண்ணீர்தர மறுக்கும் சகோதரனுக்கும் மின்சாரம் கொடுத்து அவன் தொழில் வளர உதவுகிறது...
வாக்குரிமைக்கு விலைபோன வலியை தமிழகம் அனுதினமும் உணர்ந்து வெட்கமடைகிறது...
சுரண்டும் திட்டங்களின் முகமூடியை கிழிக்கும் தைரியம் தமிழகித்திற்கு உண்டு...
தமிழகத்தின் உண்மையை வைத்து ஏமாற்றுபவர்கள் கடைசியில் ஏமாந்து மாட்டிக்கொள்கிறார்கள்....