பிரிவு முடிவல்ல
மொழி தெரியா ஊரில் இருந்து
நகர்ந்து வந்த நிலைமையில் தான்
புரிந்து கொண்டேன் உலகம்தனை ,,,
அங்கு குறுகிய வட்டத்தில் சுற்றிவந்த சூழல்கள்
உணர்த்திய காயங்கள் மறவேன் ,,,
இங்கு வந்து இப்பொழுது
கிடைத்த நட்புக்கள் ,,,
கிடைத்த அறிவுகள் ,,,
நிகழ்ந்த நிகழ்வுகள் ,,,
அனைத்தையும் எடுத்துக்கொண்டு
நகர்கிறது இப்பொழுது என் நொடிகள்
மறுபடி புது திசை நோக்கி ....
இன்று நான் செல்லும் வழி துணைக்கு எடுத்து கொள்கிறேன் உங்கள் நினைவுகளை மட்டும் ,,,
என்னை அறியாமல் நான் செய்த தவறுகள் உங்களை வருத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ,,,

