அன்பு அண்ணாச்சி V G சந்தோஷ் அவர்களுக்கு
அன்பு அண்ணாச்சி V G சந்தோஷ் அவர்களுக்கு.....
நெல்லைமண் விளைவித்த வெல்வினை அகரம்
தொல்லைகள் துயரங்கள் சுமந்தத் தலைகரகம்
வல்லமையின் வலிவழி உயர்ந்த தகைசிகரம்
எல்லையிலா தொண்டே அவர்தம் சிலசாசனம்
அண்ணல் பன்னீர்தாஸின் பாசமிகு இலக்குவனன்
அயராத உழைப்பிற்கு மெய்தந்த பகீரதன்
அன்னையின் காலடியே ஆலயமாய் தாழ்வணங்கி
ஆவியின் கனிகளான அன்புசந்தோசம் தரித்தவன்
வங்கக் கடற்கரையில் தமிழ்ச்சங்கம் தழுவி
எங்கும் வள்ளுவனுக்கு சிலைகள்பல நிறுவி
பொங்கும் தமிழறிஞர் உள்ளங்கள் வருடி -என்றும்
மங்காத விளக்கான எம்குல நகபதி
படைப்பாற்றல் பலநூறின் பதிப்பேடு- இவன்
பட்டையங்கள் தாங்கிடும் புகழ்முகடு
பன்னாடுகளில் பவனிவரும் முத்தமிழேடு -இவன்
பாடாண்திணை பிரபந்தங்களுக்கு கையேடு!
கம்பீர உருவம் கதிரொளி பிம்பம்
கரைபுரள் கவிநயம் கருத்துரை கலம்பகம்
காலனும் வணங்கி தானாவான் கவசம்
காலங்கள் கடந்தாலும் வாழ்த்திடும் எம் வம்சம்
கவிதாயினி அமுதா பொற்கொடி