என்னுயிர் மாமழையே வா

நான் உன்மத்தமாய் உன் நினைவில் காத்திருந்தேன்
உடல் வேர்த்து உள்ளம் சோர்ந்து.....

நீ வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை
நா வறண்டது நங்கை மனம் துவண்டது....

என்றும் போல் இன்றும் என்ற ஏக்கத்தோடு
தலையணையில் முகம் புதைத்து கனவுக்குள் பிரவேசித்தேன்.....

சாளரத்தில் கதவுகள் தட்டுவது போல் சத்தம் .....
ஆஹா.... என் வசந்தத்தின் வருகையோ....?
ஒருகனம் மனதில் ஒரு நிசப்தம்....
மறுகனம் இனம்புரியா இன்பம்...
தேகம் எங்கும் பரவி சில்லென ஆவி குளிர்ந்தது....

ஓ...... இதவும் கனவு தானோ....
அதங்கத்தில் அதை கடக்க முனைந்தேன்
கள்வனாய் நள்ளிரவில் வந்தாய்....
கொதித்த என் மேனியை குளிர் காற்றாய் வருடி
தூவான மலர்தூவி பாதங்களை அர்ச்சனை செய்தாய்....

தகித்த மேனி தணிந்து நான் ஆற்றிட....,
அசுர வேகத்தில் இடியும் மின்னலுமாய் அன்பைப் பொழிந்து....
இன்பத்தின் உச்சத்தில் எனை ஆட்கொண்டாய்....

இன்று ஒருநாள் எனை ஆலிங்கனம் செய்து
இன்னும் பல நாள் ஏக்கத்தில் நோகடித்திடாதே....
என்னுயிர் மாமழையே.... வா.... வா.... எந்தன் பக்கம்
வாடிய எம் பூமிக்கு நீயே சொர்க்கம் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Jul-18, 11:02 am)
பார்வை : 58

மேலே