வீரமகன்
கூர்முனை வாளும் காற்றினில் கூறிட்டாடும்
இவன் கரமேந்த
போர்முனைப் போகும் எதிர்படை சிதறியே ஓடும் நடை
வாகைப் பூவெல்லாம் நடைப்பழகி முடிசூழ படையெடுக்கும்
பதுமைத் தோகை மயில் விரிந்தாடும் களிமுகம்
விண்ணில் நீந்தும் விண்மீன்கள் இவன் சிந்திய சொற்களே
கவிபாடும் புரவலர்கள் பாமாலை சூடிட
பாரினில் இவன் புகழை வரலாறும் தேடிட
தங்கரதம் அலங்கரிக்க வீதிஉலா வந்திடுவான்
வா மகனே! வா