விடியல் தாண்டி எழுகின்றேன்

விடியல்தாண்டி எழுகின்றேன்

விடியலின் சுகம்
விழித்தவனுக்கு மட்டுமே
தெரியும் !

விழித்தவன் காதில்
“பால்” உழைப்பவன் குரல்
சர்ரென வீட்டுக்குள்
விழுந்திடும் பத்திரிக்கை
அதனையும் மீறி
வீட்டில் ஒலிக்கும் சுப்ரபாதம்
சற்று வெளியில்
வந்தால் பறவைகளின் குலவை
விடியலின் பொழுதில்
வீசிடும் மென் கூதல்

தொட்டவுடன் சில்லிடும்
வெள்ளம் அதை
உடல் தொட்டவுடன்
வந்திடும் கிளு கிளுப்பு

வழிபடும் தளம்
சென்று வணங்கிடும் இன்பம்,

இல்லையென்பவன் சுற்றி
வரும் உலாவல்

வாசலில் வரைந்திடும்
கோலங்கள் !
அதை வரைந்திடும்
அழகு பெண்கள் !

மனதுக்குள் பதியா
பாடங்கள் படித்திட
சட்டென பதியும் நேரமது !

இத்தனை சுகமா
விடியலில் எழுவது ?
அறிந்தும் ஏனோ
விடியல் தாண்டி எழுகின்றேன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Jul-18, 9:55 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 124

மேலே