என் இசை
கனவை இசையாக்க
கானம் மீட்டினேன் !
உணர்வுகள் உருக்கொண்டு
உதிரங்களாய் வழிந்தோடின.
கண்ணீர்த்துளிகளின் ஸ்வரங்கள்
கன்னத்தில் சுருதி பாட
என் இதழ்களில் சிறு புன்னகையாய்
விரைந்தோடுகிறது இசை,
வழிந்தோடிய உதிரத்தின் வெப்பம்
கொண்டு புது ராகம் மீட்ட...!