கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் - பிருந்தாவன சாரங்கா
பெரியசாமி தூரன் எழுதிய ’கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ என்ற பிரபலமான பாடலை ’பிருந்தாவன சாரங்கா’ ராகத்தில் பல இசை வல்லுனர்கள் பாடுவதை யு ட்யூபில் கேட்கலாம்.
பல்லவி
கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்
காட்சி அளிப்பது பழனியிலே (கலியுக)
அனுபல்லவி
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)
சரணம்:
கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்;
கார்த்திகை பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்;
விண்ணவர் குறையெல்லாம் நொடியினில் களைந்தார்;
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்! (கலியுக)
Kaliyuga Varadan - Bombay S. Jayashri என்று பாம்பே S.ஜெயஸ்ரீ பாடுவதைக் கேட்கலாம்.