நான் படுத்திருந்த பாயும், கனவில் வந்த பஞ்சணையும்-கனவில் உரையாடல்
* தரையில் உட்கார்ந்து உணவு உண்பதும்
தரையில் பாய் விரித்து படுப்பதும்
என்று பழக்கப்படுத்திக்கொண்ட நான்
வழக்கம்போல் நேற்று இரவு உணவுக்குப்பின்
தரையில் பாயின் மீது படுத்து உறங்கிவிட்டேன்
கனவில் ......'நான், புத்தம் புது கட்டிலில்
பஞ்சணைமேல் துயில் கொள்வதுபோல் .......
பஞ்சுமெத்தை கீழே கிடந்த பாயை நோக்கி
'பாய் பார்த்தாயா, உன்னவன் இப்போது
என்னை தஞ்சமடைந்தான், என் மீது ....நீ
பாய், பாய்தான், நான் மஞ்சம் பஞ்சு மெத்தை
அறிந்திடுவாய்......' என்றது.......இது நிஜமல்ல
நிஜமல்ல, என்று உரக்க கத்திகொண்டே,
விழ்த்துக் கொண்டேன், கனவு கலைந்தது
நான் ....., தரையில். அதே என் பாய் விரிப்பின்
மீதே .......
எனக்கேன் இப்படியொரு கனவு வந்தது
ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் இன்னும்
(* வைத்தியநாதன் அவர்களின் கவிதையின் உந்துதலில் வந்த
என்ன அலைகள் , இக்கவிதை தந்தது)
ந்துகொண்டிருக்கிறேன்........

