இந்தக்கவிதை இந்தக் கவிதை என்று முடியும்

புரண்டு புரண்டு
படுக்கிறது படுக்கை
உறக்கம் வராமல்...
உறங்க துவங்கினால்
வரக்காத்திருக்கிறதாம்
சென்ற வருடம் மாசியில்
வந்து தடுமாறிய
கனவொன்றின் மிச்சம்.
கனவில் இருந்த அக்கனவு
விழிப்பின் விளிம்பில் இருந்து
எட்டிப்பார்த்தது படுக்கையை.
படுத்துக்கிடந்த படுக்கை
எட்டி உதைத்தது துயிலை.
போர்வைக்குள் கிடந்த
என்னிடம் பேச துவங்கியது.
மொழி புரியவில்லை எனினும்
கேட்க இனிமைதான்.
பேசிக்கொண்டே
தூங்கியும் போனது.
நான்
காலையில் விழித்தேன்.
காணவில்லை படுக்கையை...
ஒரு குறிப்பு இருந்தது
அதுதான்
இந்தக் கவிதை.

எழுதியவர் : ஸ்பரிசன் (7-Jul-18, 6:53 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 76

மேலே