நிறங்களில் வளைந்த பெண் புருவம் போல்
தலைக்கு மேலே வானம்
வானத்தில் சில வண்ணங்கள்
வளைத்தவன் ராமனோ ?
வானத்தில் சில வண்ணங்கள்
நிறங்களில் வளைந்த பெண் புருவம் போல்
பார் பெண்ணையும் வானையும்
இன்னொரு வானவில் உன் நெஞ்சில் விரியலாம் !
வானத்தில் வண்ணங்கள்
வளைந்து நின்றால் வானவில்
சோதனைச் சாலையில் சோடியம் வெளிச்சத்தில்
நிறங்கள் நெட்டையாக நின்றால் நிறமாலை (ஸ்பெக்ட்ரம் )
கற்பனை உள்ளவன் கவிதை எழுதுகிறான்
கற்பனை இல்லாதவன் அறிவியலுக்கு அலை நீளம் அளக்கிறான் !
கவி வைத்திய நாதனின் வானவில்லு(ஹைக்கூ ) க்கு நானெழுதிய வரிகள்