மொழி வாழ்த்து

நாடியில் ஓடும் தமிழே- என்
நாதினம் ருசிக்கிர அமுதே!
தீந்தமிழ் ஆகிய மொழியே- என்
தீச்சுடர் ஆகிய விழியே!
பாரதி தந்த கவியால்- இப்
பார்முழு தொலிக்கும் முரசே!
நிகரிணை யில்லா வளத்தால்- இந்
நிலம்முழு தாள்கிற அரசே!
அந்நியம் வநதால் என்ன? உயிராய்
அன்னைத் தமிழை அணிவோம்!
தாலினில் தவழும் தமிழே- நின்
தாளினை யென்றும் பணிவோம்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (16-Jul-18, 3:36 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 1583

மேலே