ஆங்கிலம் அறிவல்ல

காலனி நாடுகளில் திணிக்கப்பட்ட மொழி ஆங்கிலம்...

தாயான தாய்மொழியை வெறுக்க தூண்டும் கவர்ச்சி வேஷம் கொண்ட மொழி ஆங்கிலம்...

தன்னை அறியாவிடில் எதிர்காலம் இல்லை என தலைமுறையை குழப்பும் மொழி ஆங்கிலம்...

வேர்வை சிந்தா வேலை தந்து விவசாய சந்ததியை அழிக்கும் மொழி...

முயற்சிகளை முடக்கி கடிவாள பாதையில் பயணிக்க வைக்கும் மொழி...

மேலாதிக்கத்தை அழுந்த ஊன்றத் துடிக்கும் மொழி ஆங்கிலம்...

நாம் பேசி வளர்ந்த மொழியே நம்மை உணரவைத்து வளர்ச்சி செய்கிறது; ஆங்கிலம் நாம் செல்லும் பாதையில் இருக்கும் முட்கள் எடுக்கப்பட்ட வழி மட்டுமே...

எழுதியவர் : ஜான் (14-Jul-18, 7:42 pm)
பார்வை : 390

மேலே