பாவையின் பா
பாதி நிலாவானில் அழகு
மீதிநிலா உன்நெற்றியில் அழகு
கொவ்வைச் செவ்வாயில் முத்தழகு
பாவைநீ என்கவிக்கு அழகு
-----வஞ்சி விருத்தம்
பாதி நிலாநீல வான்தன் னிலழகு
மீதிநிலா உன்நெற்றி தன்னிலே பேரழகு
கோதியகூந் தல்தன்னில் வான்முகில் காரழகு
கொவ்வைச்செவ் வாயினில் கொற்கையின் முத்தழகு
பாயும் விழிகளில் பாண்டியன் மீனழகு
பாவையே நீஎன் அழகு
----பஃறொடை வெண்பா
பாதி நிலாநீல வான்தன் னிலழகு
மீதிநிலா உன்நெற்றி தன்னிலே பேரழகு
கோதியகூந் தல்தன்னில் வான்முகில் காரழகு
கொவ்வைச்செவ் வாயினில் கொற்கையின் முத்தழகு
பாயும் விழிகளில் பாண்டியன் மீனழகு
பாவைநீஎன் கவிக்கென்று பிறப்பெடுத்த அழகோ ?
-----நிலை மண்டில ஆசிரியப்பா

