அதுவரை மனிதனை நம்புவாயோ நீரே

நீரே நீ இன்றும் மனிதனை நம்புகின்றாயோ ?
கண்கள் கலங்கி போகின்றது
தண்ணீரே உன்னை மனிதன் நம்பவில்லை
உன் உதவி வேண்டும்
ஆனால்உன் மதிப்பு அறிந்ததில்லை
நீ வேண்டும் ஆனால் உன் சேமிப்பு வேண்டாம்
அது ஏனோ ?
நன்றியை மறப்பது
இது மானிடரின் அம்சமோ !
நீ வந்தால் வரவேற்கிறார்கள்
ஆனால் நீ வந்த மகிழ்ச்சியில் உன்னை ஏனோ சேமிக்க மறுக்கிறார்கள்
நிலம் வேண்டும் நிலத்தடி நீர் வேண்டும் ஆனால்
பூமிக்கு நீர் வேண்டும் என்று ஏனோ மறக்கிறார்கள்
ஏரி ,கண்மாய், கிணறு, ஆறு எதுவும் வேண்டாம் வீடு மனை போதும்
ஆனால் நீரும் வேண்டும்
சுத்தமாய் வேண்டும்
இவர்கள் அசுத்தம் ஆக்கிவிட்டு
உழவு வேண்டாம் ஆனால் பசி ஆற்ற உணவு வேண்டும்
நீரே இன்றியமையாது உலகு என்று பாடிய நாட்டில்
ஏனோ நீரின் பயன் தெரியவில்லை
ஒவொரு சொட்டு நீரும் வைரமாய் கருத்திடவே வேண்டுமே
சேமிப்பு அவசியம் என்று தெரிய வேண்டுமே மழையே
அதுவரை நீ மனிதனை நம்புவாயோ மழையே
செல்வம் பெரிதனினும் நீரே அதை விட பெரிதென்று போற்றுவோம்
அன்று நீ மனிதனை நம்பு நீரே
அதுவரை நீ மனிதனை நம்புவாயோ ?

எழுதியவர் : பிரகதி (20-Jul-18, 3:32 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 2982

மேலே