நிலத்தை உழுதேன்
நிலத்தை உழுது போட்டு
மனசையும் கல் ஆக்கி
வெள்ளாமை பண்ண காத்து கிடக்கையிலே
மழை வருமுன்னு கண்ணை கசக்கி
கன்னத்தில் கை வைத்து வானத்தை பார்க்கையிலே
மேகம் திரண்டு கரு வானம் போர்த்தி
ஒவொரு சொட்டாய் மழை துளி விழுகையில்
நான் மழை பெய்யும் என அரக்க பறக்க அந்த புழுதி காட்டில் ஓடி திரிகிறேன்
ஒன்றும் வராமல் ஏமாந்து போகிறேன்
உழுத நிலத்தை பார்த்து
அந்த வறண்ட பாலை வானத்தை பார்த்து
மீண்டும் நடக்கிறேன் புழுதி காட்டில்
அந்த புழுதி மண்ணில் எங்கோ பேயும் மண் வாசம் நுகர்ந்து
மீண்டும் மழை வரும் என்ற நம்பிக்கையுடன்
மீண்டும் ஏர்கலப்பை எடுக்கிறேன் அடுத்த காட்டை உழுவதற்கு ............
மழை எப்பொழுதாவது வரும் என்று .....................