பாலியல் கொடுமை

60 வயது பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை
6 வயது பிஞ்சுக்கும் பாதுகாப்பில்லை ...

கல்லூரி கன்னிகளை கேட்கவே வேண்டாம் .....
காதல் என்னும் கூத்து நடத்தி ....
கத்தியும் ரத்தமும் வடிய குத்தி வீசுகிறார்கள் ....

என்ன ஒரு அருமையான சமுதாயம் !!

பாலியலுக்கு பலியாகும் பிஞ்சுகளை பற்றி கவலையில்லை ...
காதலால் சூறையாடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை நினைவில்லை ....
இந்தியா பாலியல் வன்முறையில் முதலிடம் ! என்ற தகவல் மட்டும் கசக்குதாம் ..
ஆராய்ச்சியில் பிழையாம்...!!

ஆராய்ச்சியை எதிர்த்து பிடிக்கும் கொடிகளை
அவலம் தீர பிடித்திருக்கலாம் ....

7 வயது பிஞ்சை .......23பேர் ..........ச்சா .....ச்சா
எப்படியடா முடிந்தது உங்களால் ......

காட்டு மிருகங்களே....!!
உங்களை நாட்டில் விட்டது யார் ???

எழுதியவர் : HUMS (20-Jul-18, 4:21 pm)
Tanglish : paliyal kodumai
பார்வை : 192

மேலே