பெண்மையின் தாய்மை

மனம் முடிக்கும் நொடி மாங்கல்யம் கழுத்தில் ஏறும் அந்த தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

புகுந்த வீட்டில் ஒரு நல்ல மருமகளா வாழ என் ஆசைகள் மற்றும் துயரங்களை எனக்குள்ளயே புதைத்த தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

நான் கருவுற்று இருக்கும் மாதத்தில் நீ என்னை உன் வயிற்றில் சுமந்த அனுபவத்தை நான் சிசுவை சுமக்கும் தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

மகப்பேற்றின் பொழுது நீ பொறுத்து கொண்ட பிரசவ வலியை நான் பொறுக்கமுடியாமல் துடிக்கும் தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

அந்த சின்ன ஸ்பரிசம் , எனக்குள் உருவாகிய உயிர் , என்னுடன் பத்து மாதம் ஓருயிராய் இருந்த உறவு இன்று என்னை தீண்டும் தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

நான் தாய்மையை உணர்ந்த எல்லா வேலைகளிலும் என் தாயாகிய நீ இவுலகில் இல்லை , இன்று நான் தாய்மை அடைந்த தருணத்தில் உன் தாய்மையை முழுமையை உணர்கிறேன் அம்மா .

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (20-Jul-18, 5:18 pm)
Tanglish : penmayin thaimai
பார்வை : 229

மேலே