நந்தினி மோகனமுருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நந்தினி மோகனமுருகன்
இடம்
பிறந்த தேதி :  30-Aug-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Mar-2015
பார்த்தவர்கள்:  576
புள்ளி:  44

என் படைப்புகள்
நந்தினி மோகனமுருகன் செய்திகள்
நந்தினி மோகனமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2020 1:27 pm

தன்னவளுக்கு தன் காதலை சொல்ல என்னவளை என்னிடம் இருந்து பிரித்து சென்றான் அவன் !!!

என்னவளாகிய சிகப்பு ரோஜாவின் பிரிவால் வாடி தவிக்கும் நான் வெள்ளை ரோஜா !!

மேலும்

நந்தினி மோகனமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2020 7:10 am

எவரும் காணாதபோது என்னை பார்க்கும் உன்  இரு விழிகளை நான் அறிவேன் !

என் செயல்கள் அனைத்தையும் ரசித்து புன்னகைக்கும் உன் இதழ்களை நான் அறிவேன் !

நான் எங்கே சென்றாலும் என் பின்னால் தொடர்ந்து வரும் உன்  பிம்பத்தையும் நான் அறிவேன் !

நீ என்மேல் கொண்டுள்ள காதலையும், அதை சொல்ல முடியாமல் துடிக்கும் உன்  தவிப்பையும் நான் அறிவேன் !

நானே உன்  உயிர், நானே உன் உலகம், நானே உனது அனைத்தும் என  நீ வாழ்ந்து கொண்டிருப்பதையும் நான் அறிவேன்.

நான் அறிய மாட்டேன் என நீ நினைத்து கொண்டிருக்கும் உன் அறியாமையையும் நீ அறியாமல்  நான் அறிவேன் !

என்றும் நான் உன்னை அறிவேனடா !!!

மேலும்

நந்தினி மோகனமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2020 6:42 am

பெண்ணை போற்றும் இவ்வுலகில்
அவளே தீண்டத்தகாதவள் ஆனாள்
அந்த  மூன்று  நாட்கள் !

பெண்ணை தெய்வமாக  வணங்குவோரும்
அவள் தெய்வத்தை  வணங்க தடையிட்டனர்
அந்த  மூன்று நாட்கள் !

பூவைப்போல் மென்மையானவள் பெண்
அவள் பூவை தொட்டால் கருகிவிடும் என்றனர் அந்த மூன்று நாட்கள் !

பெண்ணின் உதிரத்தில் இருந்து உருவான சிசுவை கொண்டாடும் உற்றார்
அவள் உதிரப்போக்கை உணர்வதில்லை
அந்த  மூன்று  நாட்கள் !

உடலில்  மிக வலிமையான எலும்புகளும்
முதுகுத்தண்டும் வாள் வீசி சண்டை இடுகின்றனர் அந்த  வலிகளையும் பொறுக்கிறாள் பெண் அந்த  மூன்று நாட்கள் !

தினம் பம்பரமாய் சுற்றி திரியும் பெண்
ஓர் இடத்தில்  அமரமுடியாமல

மேலும்

நந்தினி மோகனமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2018 5:18 pm

மனம் முடிக்கும் நொடி மாங்கல்யம் கழுத்தில் ஏறும் அந்த தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

புகுந்த வீட்டில் ஒரு நல்ல மருமகளா வாழ என் ஆசைகள் மற்றும் துயரங்களை எனக்குள்ளயே புதைத்த தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

நான் கருவுற்று இருக்கும் மாதத்தில் நீ என்னை உன் வயிற்றில் சுமந்த அனுபவத்தை நான் சிசுவை சுமக்கும் தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

மகப்பேற்றின் பொழுது நீ பொறுத்து கொண்ட பிரசவ வலியை நான் பொறுக்கமுடியாமல் துடிக்கும் தருணத்தில் உன் தாய்மையை உணர்ந்தேன் அம்மா.

அந்த சின்ன ஸ்பரிசம் , எனக்குள் உருவாகி

மேலும்

நந்தினி மோகனமுருகன் - நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2017 7:07 pm

என்னுயிரின் பாதி ஆனவனே , உன்னை காணாமல்
என் கண்கள் தூங்க மறுக்குதடா !!

என் சுவாசத்தில் கலந்தவனே , உன் ஸ்பரிசத்தில் உறைய
என் பெண்மை துடிக்குதடா!!

என் தேடலுக்கு விடையானவனே , என் தேகங்கள்
உன் மார்பினில் இடம் தேடுதடா!!

என் வெட்கத்தை உடைத்தவனே , என் கைகள்
உன் கைகள் கோர்க்க துடிக்குதடா!!

எனக்காக பிறந்தவனே! நான் பிறக்கும் முன் பிறந்தவனே!!
நம் இரு இதயங்கள் ஓர் இதயமாய் துடிக்க ஏங்குதடா!!!!!

மேலும்

நன்றி 25-Jul-2017 5:45 pm
பெண்ணை தன் காதலைப் பேசுதல் மரபன்று! எனினும், உணர்வை வெளிப்படுத்தும் சொல்லாட்சி நன்று. 21-Jun-2017 4:54 pm
நந்தினி மோகனமுருகன் - நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2017 3:10 pm

இந்த பூமிக்கு தேவதையாய் வந்தவளே
உன்னுயிர் கொண்டு என்னுயிர் தாங்கியவளே

உன் உறக்கம் களைத்து நான் கண் உறங்க செய்தாயே
நம் உறவுகள் யாவும் நீ அறிமுகம் செய்தவையே

நான் வலி என அழுக உன் உயிர் நீங்கிட துடித்தாயே
நல்லவை தீயவை என வாழ வழி வகுத்து தந்தாயே

நான் இன்று சுவாசிக்கும் மூச்சும் நீ எனக்கு தந்தவையே
அம்மா உன் மடியே போதும் அதுவே எனக்கு சொர்க்கமே ...!!!!

மேலும்

நன்றி..... 22-May-2017 7:48 am
நன்றி !! 22-May-2017 7:48 am
அருமை..... தாய் மடி சொர்க்கமே 21-May-2017 6:26 pm
":உன்னுயிர் கொண்டு என்னுயிர் தாங்கியவளே". அழகான வரிகள் நந்தினி! 20-May-2017 10:10 pm
நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Sep-2015 9:51 pm

திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும்
குழந்தை பேறு அடையாமல் தவித்தாள் !!

அவளுக்குள் உருவாகிய எனக்காக
அவளையே பகிர்ந்து கொண்டாள் !!

அவளுடைய இரத்தம், சுவாசம் என
அனைத்தையும் எனக்காக அற்பனித்தாள் !!

நான் இவ்வுலகை காணும் வேளையில் அவளுக்கு அளித்த
தாங்க முடியாத வலியையும் எனக்காக பொறுத்து கொண்டாள் !!

என்னை கண்டதும் அத்துணை வலியையும்
மறந்து உள்ளம் நெகிழ்ந்து அணைத்து முத்தமிட்டாள் !!

அவள் கண் விழிக்கும் நொடி முதல் கண் உறங்கும்
நொடி வரை என்னுடனே இருந்தாள் !!

தனக்கு மார்பக புற்று நோய் என அறிந்ததும் , சாக போகிறோம் என வருந்தாமல் ,
இனி அ

மேலும்

தாயின் அன்புக்கு ஈடு இணையே இல்லை... நல்ல படைப்பு... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 1:17 am
பத்து பாதம் என்னை சுமந்து இடுப்பு வலி தாங்கிய அம்மா உன் பாசத்துக்கு முன்னாலே எல்லாமே சும்மா.வாழும் மண்ணில் உதிரத்தை ஊற்றி வளர்த்த தெய்வம் அவள் காலடி சுவன வாசல்.பேச்சுக்கள் கடவுளின் பாசிகள் என் இதயத்தில் ஓடும் சுவாசமும் அவளைத்தான் தேடி அலையும் நான் இறக்கும் வரியில்......தாயின் மகிமை பேசும் கவி 04-Sep-2015 11:56 pm
நன்றி.... 04-Sep-2015 10:12 pm
அருமை!!!!!!!!!!! 04-Sep-2015 10:09 pm
நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2015 7:09 pm

காலை கண் விழித்த நொடி முதல்
உன் ஞாபகங்கள்!

உன் நினைவுகள் என் மனதில் அழியா
சுவடாய் பொதிந்துள்ளன!

நீ இல்லா வாழ்க்கை நரகமாய்
உள்ளது அம்மா!

உன்னை பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை!

உன் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் என்னை கொல்கிறது!

இன்றோ உனது நினைவு நாள், ஆனால்
என் மனம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது!

நீ வேண்டும், உன்னுடன் வாழ்ந்த அந்த
பொக்கிஷமான ந

மேலும்

நன்றி தோழா!!!!!! 26-Aug-2015 6:11 am
வாழ்த்துக்கு நன்றி....... 26-Aug-2015 6:11 am
நன்றி தோழா!!!! 26-Aug-2015 6:11 am
தாயிற்கு மனம் எழுதிய மடல் அம்மா எனும் உயிர் துடித்தாள் என் மனம் நோகும் இறைவா நீ உள்ளம் அற்றவனா? 26-Aug-2015 12:41 am

முதல் முதலாய் நான் கைகோர்த்து
நடக்க ஆசைப்பட்டவன் நீ!

நான் அழும்போதும் துவண்டுபோகும் போதும்
ஆறுதலாய் தோள் கொடுத்தவன் நீ!

என் சந்தோஷத்திற்காக உன் கஷ்டங்களை மறைத்து என்னை ஓர்
இளவரசி போன்று பார்த்துக்கொண்டவன் நீ!

என்னை பெற்றவள் இறந்து போனாள்
பெறாமலே தாயாக மாறியவன் நீ!

எனக்காக நீ செய்த தியாகங்களோ பல! உன் பாசத்தை என்னவென்று கூற!

நீ மனிதன் அல்ல , கடவுள் எனக்கு தந்த பொக்கிஷம்...

நீயே எனது ஹீரோ!!
நீயே எனது தோழன்!!

என்றும் உன்னை நேசிப்பேன் அப்பா!!!!!

மேலும்

நன்றி தோழரே 04-Apr-2015 9:52 pm
arumai தோழரே தொடருங்கள் 04-Apr-2015 8:31 pm
நந்தினி மோகனமுருகன் அளித்த படைப்பை (public) மணிகண்டன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Mar-2015 5:37 pm

உலகில் மிக கொடுமை தனிமை!

நான் பேசுவதை கேட்க ஓர் உயிரை
தேடினேன்!

நான் சாயிந்து கொள்ள ஓர் தோள்
தேடினேன்!

நான் கண்மூடித்தூங்க ஓர் மடி
தேடினேன்!

நான் நேசிக்க ஓர் இதயம்
தேடினேன்!

நான் அனுபவிக்க தூய்மையான ஓர் அன்பை
தேடினேன்!

நான் எனக்குள் கரைய ஓர் காதல்
தேடினேன்!

ஆனால் நான் மிக கொடுமையான
தனிமை என்னும் உலகத்தில் உயிரோடு தள்ளப்பட்டேன்!!!!!!!

மேலும்

வலியின் வழி அழகான வரிகளில் ............... 20-Jun-2015 7:07 pm
unmaiyil kodumai thaan thozhi 31-Mar-2015 9:16 am
நன்றி தோழரே... 30-Mar-2015 9:12 pm
தாங்கள் மேலே கூறிய அனைத்தும் உள்ளவர்களுக்கு சிந்திக்க ஒரு சந்தர்பம் இள்ளாதவர்கு கொடுமைதான் அருமையான வரிகள் மேன்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் 30-Mar-2015 8:39 pm

எத்தனையோ மொழிகளில் உன்
மழலை மொழியோ அதிசயம்!

உன் சிறிய பாதங்களில் நீ தத்தி தத்தி
நடக்கும் நடையோ அதிசயம்!

உன் பிஞ்சு விரல்களில் நீ என்னை
தொடும்போது ஏற்படும் உணர்வோ அதிசயம்!

உன்னை அணைக்கும்போது என் மனதில்
ஏற்படும் மகிழ்ச்சியோ அதிசயம்!

உன் வெகுளி தனத்தால் நீ செய்யும்
சிறு சிறு சேட்டையோ அதிசயம்!

உன்னை பார்க்கும்பொழுது என்
சோகத்தை மறந்தேன்! நீ
குழந்தையா தெய்வமா என எண்ணி வியந்தேன்!!!!!!!!

மேலும்

நன்றி தோழா!!! 24-Mar-2015 9:15 pm
அருமை நல்லக் கற்பனை...தொடருங்கள் தோழி... 24-Mar-2015 9:11 pm

என்று நான் உன்னை கண்டேனோ
அன்றிலிருந்து என் பார்வைகள் புதிதானதடா!

என்று உன்னை நினைக்க தொடங்கினேனோ
அன்றிலிருந்து நான் சுவாசிக்கும் காற்றும் புதிதானதடா!

என்னை மறந்து உன்னை பார்க்கும் என் விழிகள்
நீ பார்க்கும் போது சற்றே தடுமாறுதடா!

உன்னை பார்த்ததும் என்னை அறியாமல்
என் இதழ்கள் புன்னகைப்பதை உணர்ந்தேனடா!

ஒரு நாள் முழுதும் உன்னுடன் இருந்தாலும்
நீ சென்ற அடுத்த நொடி என் இதயம் கனக்கிறதடா!
உன் பிரிவினால்!!!

மேலும்

நன்றி! 01-Apr-2015 8:13 pm
நன்றி 01-Apr-2015 8:12 pm
வாழ்த்துக்கு நன்றி... 01-Apr-2015 8:12 pm
அற்புதம்.... பூக்களை சுமந்ததாலூம் காதல் நெஞ்சம் வலிக்கும்...... 31-Mar-2015 12:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

கோபி

கோபி

சென்னை
மணிகண்டன்

மணிகண்டன்

சேலம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

பிரபலமான எண்ணங்கள்

மேலே