மழலை

எத்தனையோ மொழிகளில் உன்
மழலை மொழியோ அதிசயம்!

உன் சிறிய பாதங்களில் நீ தத்தி தத்தி
நடக்கும் நடையோ அதிசயம்!

உன் பிஞ்சு விரல்களில் நீ என்னை
தொடும்போது ஏற்படும் உணர்வோ அதிசயம்!

உன்னை அணைக்கும்போது என் மனதில்
ஏற்படும் மகிழ்ச்சியோ அதிசயம்!

உன் வெகுளி தனத்தால் நீ செய்யும்
சிறு சிறு சேட்டையோ அதிசயம்!

உன்னை பார்க்கும்பொழுது என்
சோகத்தை மறந்தேன்! நீ
குழந்தையா தெய்வமா என எண்ணி வியந்தேன்!!!!!!!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (24-Mar-15, 7:42 pm)
Tanglish : mazhalai
பார்வை : 174

மேலே