எறும்பும் மூன்று பாக்களும்
ஓர் இலையின் தற்கொலையில்
ஓர் எறும்பு உயிர் பிழைக்கிறது
நிகழ்விடம் நதியென்றால்..!
//
பஞ்ச பரதேசிகளா இந்த எறும்புகள்?
எங்கள் நாட்டு ஏழைகளைப்போல
அணிவகுத்து செல்கிறது
உணவைத்தேடி.
//
ஏ மனிதா..! எறும்பின் வீரம்
உனக்கில்லையோ?
எறும்பின் சினத்தில்
காலில் கடிவாங்கிய வலியில்தானே
தடுமாறி விழந்தாய் மனிதா.?