காலாவதியான வாசகங்கள்

குப்பைகளை
இங்கு கொட்டாதீர்!

*

சுவற்றில்
நோட்டீஸ் ஒட்டவோ
எழுதவோ கூடாது!

*

சாலை விதிகளை மதிப்போம்!

*

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு!

*

புகை பிடிக்காதீர்!

*

படியில் நின்று
பயணம் செய்யாதீர்!

*

சிறுவர்களைப் பணியில் அமர்த்தாதீர்!

*

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்!

*

தலைக்கவசம் உயிர்க்கவசம்!

*

லஞ்சம்
வாங்குவதும்
கொடுப்பதும்
சட்டப்படி குற்றம்!

*



பலபேருடைய
நிகழ்கால வாழ்வில்
காலாவதியாகிப்போன
இதுபோன்ற வாசங்கள்
அனைத்தும்
அவன் ஓங்கி உடைத்த
தேங்காய் போலச்
சிதறிக்கிடந்தன-சாலையில்...

எழுதியவர் : திருமூர்த்தி.v (24-Mar-15, 8:14 pm)
பார்வை : 428

மேலே