நான் உன்னை அறிவேன்
எவரும் காணாதபோது என்னை பார்க்கும் உன் இரு விழிகளை நான் அறிவேன் !
என் செயல்கள் அனைத்தையும் ரசித்து புன்னகைக்கும் உன் இதழ்களை நான் அறிவேன் !
நான் எங்கே சென்றாலும் என் பின்னால் தொடர்ந்து வரும் உன் பிம்பத்தையும் நான் அறிவேன் !
நீ என்மேல் கொண்டுள்ள காதலையும், அதை சொல்ல முடியாமல் துடிக்கும் உன் தவிப்பையும் நான் அறிவேன் !
நானே உன் உயிர், நானே உன் உலகம், நானே உனது அனைத்தும் என நீ வாழ்ந்து கொண்டிருப்பதையும் நான் அறிவேன்.
நான் அறிய மாட்டேன் என நீ நினைத்து கொண்டிருக்கும் உன் அறியாமையையும் நீ அறியாமல் நான் அறிவேன் !
என்றும் நான் உன்னை அறிவேனடா !!!