அம்மா என் அகராதி

பொங்கும் பொழுதினில் இன்பம் குழைத்து
தங்கும் இடத்தினில் எங்கும் நிரப்பும்
இன்முக சாயலும் ஆசை மொழிகளும்
உனையன்றி வேறொருவருக்கும் இல்லையம்மா

என்னுலகாளும் ஒற்றைச்சொல் அகராதி - அம்மா
விண்ணுலக தேவதைகள் உன்னுருவில் வந்திறங்க
உன்னோடிருக்கும் வரமொன்றை அள்ளித்தந்தது
இறைவனும் ஆசைகொள்கிறான் நம்மோடு உறவாட

உன் அன்பதனில் நித்தம் நனைந்திருந்தால்
தென்றல் தாலாட்டும், அக்னி குளிரும்
வேப்பம்பூ இனிக்கும், காகிதப்பூ மணக்கும்
இளமை திரும்பும்,
வசந்தம் வாடிக்கையாகும்!

விழித்தேடும் இடமெல்லாம் விடையாய் நீயிருக்க
விதைத்த நின்னன்பு தாய்மை கற்பித்தது
நெகிழ்ச்சிக்கடலில் திளைக்கிறேன் உன்னன்பில் உறவாடி
எப்பிறப்பிலும் உன்சேய்யாகும் வரவேண்டும்

தாயே வரமென்று தரணிக்கு நானுரைப்பேன்
என் தாயுள்ளம் போல் மிளிரும்
பெண்டீருக்கும் நல்லுள்ளம் கொண்ட ஆடவர்க்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (11-May-20, 6:34 am)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 605

மேலே