அம்மா

அகிலத்தையே அன்பில் அள்ளித்தரும் பேரரழகி நீயடி
ஆண்டவனே அறியாத என் எண்ணங்களின் இயல்பு அறிந்தவள் நீயடி
இம்சைகளையும் இன்னல்களையும் இன்பமாய் சுமக்கு சுமைதாங்கி நீயடி
ஈகையினை இலக்காய் கொண்டவள் நீயடி
உதிரத்தையும் உணவாய் கொடுத்த உணர்வுகளின் முடிவிலி நீயடி
ஊறு,துரோகம் என்பதன் பொருள் அறிய பொக்கிஷம் நீயடி
என் இளமையை மீட்டெடுக்க உன் இளமைக்கு விடுமுறை விடுத்தவள் நீயடி
ஏனோ சுயநலம் என்ற சொல்லில் அடங்காத இவ்வண்டத்தின் பிரம்மாண்டம் நீயடி
ஒரு போதும் கைமாறு எதிர்பாக்காத கருணையின் குவியல் நீயடி
ஓர் கணமும் உன் நினைவில் என்னை அகலாது காத்து காலம் கடத்துபவள் நீயடி
நீயே நீ மட்டுமேயடி என் அம்மா !

எழுதியவர் : சுசித்ரா இளங்கோவன் (10-May-20, 2:24 am)
Tanglish : amma
பார்வை : 209

மேலே