என்னுயிர் ஆனவனே

என்னுயிரின் பாதி ஆனவனே , உன்னை காணாமல்
என் கண்கள் தூங்க மறுக்குதடா !!

என் சுவாசத்தில் கலந்தவனே , உன் ஸ்பரிசத்தில் உறைய
என் பெண்மை துடிக்குதடா!!

என் தேடலுக்கு விடையானவனே , என் தேகங்கள்
உன் மார்பினில் இடம் தேடுதடா!!

என் வெட்கத்தை உடைத்தவனே , என் கைகள்
உன் கைகள் கோர்க்க துடிக்குதடா!!

எனக்காக பிறந்தவனே! நான் பிறக்கும் முன் பிறந்தவனே!!
நம் இரு இதயங்கள் ஓர் இதயமாய் துடிக்க ஏங்குதடா!!!!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (20-Jun-17, 7:07 pm)
Tanglish : ennuyir aanavane
பார்வை : 426

மேலே