அந்த மூன்று நாட்கள்
பெண்ணை போற்றும் இவ்வுலகில்
அவளே தீண்டத்தகாதவள் ஆனாள்
அந்த மூன்று நாட்கள் !
பெண்ணை தெய்வமாக வணங்குவோரும்
அவள் தெய்வத்தை வணங்க தடையிட்டனர்
அந்த மூன்று நாட்கள் !
பூவைப்போல் மென்மையானவள் பெண்
அவள் பூவை தொட்டால் கருகிவிடும் என்றனர் அந்த மூன்று நாட்கள் !
பெண்ணின் உதிரத்தில் இருந்து உருவான சிசுவை கொண்டாடும் உற்றார்
அவள் உதிரப்போக்கை உணர்வதில்லை
அந்த மூன்று நாட்கள் !
உடலில் மிக வலிமையான எலும்புகளும்
முதுகுத்தண்டும் வாள் வீசி சண்டை இடுகின்றனர் அந்த வலிகளையும் பொறுக்கிறாள் பெண் அந்த மூன்று நாட்கள் !
தினம் பம்பரமாய் சுற்றி திரியும் பெண்
ஓர் இடத்தில் அமரமுடியாமல் நிற்க முடியாமல் வேதனையை அனுபவிக்கிறாள் அந்த மூன்று நாட்கள் !
ஒன்றல்ல இரண்டல்ல மாதம் மாதம் இந்த வலிகளையும், வேதனையையும், உதிரப்போக்கையும் அனுபவிக்கிறாள் பெண் அந்த மூன்று நாட்கள் !
உறவுகளின் ஆதரவும் அவளவனின் முத்தங்களும் அவளுக்கு அரவணைப்பாய் இருந்தால் தூசு போல் கடந்து விடுவாள் பெண் அந்த மூன்று நாட்களை !!!