விதி

எங்கிருந்தோ வேகமாய்ப் பறந்து வந்தது ஓர் காகம்
வந்து தெருஓர மின்சார கம்பிமேல் அமர
சற்று அழுந்தி உட்கார்ந்ததோ ...... அதன் வால்
இரண்டாம் மின்கம்பிமேல் பட்ட அக்கணமே
தரையில் தள்ளப் பட்டது காகம் உயிரற்ற கரித்துண்டாய்
காகம் நினைத்திருக்குமோ இப்படி ஓர் முடிவை
இது விதியா .... இல்லை .... என்னென்பது ?

அவன் ஓர் தீவிர நாத்திகன்..... இளைஞன்
கோடையில் ஒரு நாள்
சாயந்திர வேலை.... ஒரு மேடையில் சொற்பொழிவுக்கு
நடந்து போய்க்கொண்டிருக்கிறான்....
அது மரங்கள் அடர்ந்த சாலை அவன் போகும் இடமும் தூரமில்லை
திடீரென்று சூறாவளிபோல் ஓர் காற்று... வான்முட்ட
மண் வாரி இறைத்து .... போர்க்களமாக்கியது விண்ணை
இடியும் மின்னலும் இப்போது ..... மழையும் வர
நடந்துகொண்டிருந்த நாத்திகன்
ஓர் அடர்ந்த மரத்தின் அடியில் தஞ்சம்
வந்து நின்றான் ...இமைக்கும் நேரத்தில் ஓர் மின்னல்.. ஓர் இடி
துவண்டு விழுந்தான் நாத்திகன் உயிர்ப்போனது
கரித்துண்டாய் மரத்தடியில்....
காற்று நின்றது... மழையும் இடி மின்னலும்
இப்போது அந்த மரத்தடியில் ஒரு கூட்டம்
மக்கள் கூட்டம்... போலீஸ், ஆம்புலன்ஸ்
நாத்திகனின் உற்றார் உறவினர்.... கூக்குரல் அழுகை
அவன் தாய் கதறுகிறாள்...... இப்படியா எழுதி இருக்கு உன் விதி..
ஆரா துன்பத்தில் .....

நாத்திகன் நினைத்தும் பார்த்திருக்க மாட்டான்
அவன் முடிவு இப்படி போகும் என்று

இது...... இது என்ன .... விதி ,,,, வல்வினை வேறென்ன
ஊழ்வினையா ..... 'அவனே அறிவான்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-20, 9:37 am)
Tanglish : vidhi
பார்வை : 114

மேலே