என் அம்மா

திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும்
குழந்தை பேறு அடையாமல் தவித்தாள் !!

அவளுக்குள் உருவாகிய எனக்காக
அவளையே பகிர்ந்து கொண்டாள் !!

அவளுடைய இரத்தம், சுவாசம் என
அனைத்தையும் எனக்காக அற்பனித்தாள் !!

நான் இவ்வுலகை காணும் வேளையில் அவளுக்கு அளித்த
தாங்க முடியாத வலியையும் எனக்காக பொறுத்து கொண்டாள் !!

என்னை கண்டதும் அத்துணை வலியையும்
மறந்து உள்ளம் நெகிழ்ந்து அணைத்து முத்தமிட்டாள் !!

அவள் கண் விழிக்கும் நொடி முதல் கண் உறங்கும்
நொடி வரை என்னுடனே இருந்தாள் !!

தனக்கு மார்பக புற்று நோய் என அறிந்ததும் , சாக போகிறோம் என வருந்தாமல் ,
இனி அவள் இல்லாமல் நான் என்ன செய்ய போகிறேன் என்றே வருந்தினாள் !!

சிகிச்சையில் தலை முடி உதிர்ந்து தனக்கு புற்று நோய் என தெரிந்ததால் , என்னை
எவரும் மணக்கமாட்டார்கள் என்றே அஞ்சினாள் !!

என்னை தாய் அற்றவள் என்று எவரும் சொல்லி விட கூடாது என்பதற்காக
தன்னால் முடிந்தவரை எமனோடு போராடினாள் !!

இப்படி பட்டவளை யாருக்குதான் பிடிக்காது ? இறைவனுக்கும் அவளை பிடித்து போக
தன்னிடம் அழைத்து கொண்டான் !!

அவள் உடல் இவ்வுலகில் இல்லை என்றாலும் , இன்று
நான் சுவாசிக்கும் காற்றாய் எனக்காக வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறாள் !! என் அம்மா !!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (4-Sep-15, 9:51 pm)
Tanglish : en amma
பார்வை : 347

மேலே