உயிர் கொடு கண்மணி

என் செந்தூர பூங்காற்றே!
செங்காந்தல் பூங்கொத்தே!
சின்ன சின்ன மைவிழியே!
என் சிங்கார சித்திரமே!
பனி தூவும் மழை மேகமே!
என் பச்சிலம் மழலையே!
பட்டு நூல் மேனியே!
என் பட்டாம்பூச்சிகாரியே!
அடி என்ன சொல்லி நான்
உன்னை அழைக்க
உன்னை காணத என்
கண்ணுக்கு நீ முகம் காட்ட
இந்நேரமே வந்துவிடு
உனக்கே தெரியாமல்
நீ எடுத்துச் சென்ற
என் உயிரை நீயே
வைத்துக்கொள்
அதற்க்கு பதில்
உன் உயிரை மட்டும்
எனக்கு கொடு
நானும் மண்ணில் வாழ வேண்டும்
எனக்காக இல்லை என்றாலும்
என் உயிர்க் காதலியே உனக்காகவாவது
நான் வாழ வேண்டுமல்லவா
உயிர் கொடு கண்மணியே...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 9:18 am)
Tanglish : uyir kodu kanmani
பார்வை : 78

மேலே