மதமெனும்

சிவ பெருமான்
ஒருபோதும் சொன்னதில்லை
தாம் ஒரு இந்து என்று

இயேசு பிரான்
எங்கேயும் கூறவில்லை
தான் ஒரு கிருஸ்தவன் என்று

நபிகள்
ஒருபோதும் சொன்னதில்லை
தான் முகமதியன் என்று

நாம் மட்டும் தான்
சண்டையிட்டு கொள்கிறோம்
இதுதான் சிறந்த மதமென்று

ஆனால் நாத்திகனையும்
சுமந்தபடி சுற்றி கொண்டேதான்
இருக்கிறது

எந்த மதமென்றே தெரியாத
பூமி

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (24-Jul-18, 5:57 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : mathamenum
பார்வை : 94

மேலே