அருவி

பசுமை போர்த்திய
மலைகளின் இடையில்
எட்டிப் பார்க்கும் அருவியே..!

இயற்கை அன்னையின்
செல்ல மகள் நீதானோ..?

கண்ணைப் பறிக்கும்
வெள்ளை நிறத்தவளே..

பௌர்ணமி நிலா வெளிச்சத்தை
உருக்கி வந்தாயா..?
இல்லை
பாற்கடலை
கடைந்து வந்தாயா..?

உச்சியிலிருந்து
என் உச்சம் தொட
வந்தாயா..?
இல்லை
பாறைகளில்
பாய்ந்தோடி
பார் காண வந்தாயா..?

அழகின் அற்புதமே
உன் பயணம்
வெல்லட்டும்..!

எழுதியவர் : கலா பாரதி (24-Jul-18, 2:47 pm)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : aruvi
பார்வை : 127

மேலே