எதுவும் நடக்கும்

எதுவும் நடந்திடலா மென்றெண்ணும் வாழ்வில்
எதுநடந் தாலும் இதுநான் – எதிர்பார்த்
ததுவென் றமைதியுடன் தாங்கிடவே நீயும்
எதுவும் நடக்குமென் றெண்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Jul-18, 1:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 107

மேலே