ஆன்மப் பயணம்

இரவிலும் இறவாத சிந்தையில் பிரபஞ்சத்தின் எல்லையில் இருளில் திக்கித் திணறி திசையறியாது சாந்தமாய் ஒருமித்த மனம் தியானம் செய்து மேலும் ஒருமிக்கவே பூமி ஒரு சிறு அந்தரத்தில் சுழல் பந்தாக ஆனால் கண்களுக்கு தென்பாடாதாக சிறு சிறு மின்மினி பூச்சிகளாய் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்க பரவெளியில் நான் மிதக்கிறேன்.

சுவாசிக்க காற்று இல்லை,
நுரையீரலில் விம்மி வலிக்கிறது,
கழுத்தில் உயிர்குழி துடிக்கிறது,
விரைத்து உடல் விறகுகட்டையாக அந்தரத்தில் மிதந்திருக்கும் வேளை வேகமாக ஒளிக்கீற்றைப் போல் வீண்மீன் ஒன்று என் அருகே பாய் கண் இமைக்கும் நேரத்தில் என்னைக் கடக்கிறது.
விண்மீனோடு ஈர்க்கப்படவானாய்,
காந்த விசையில் சிக்கிய இரும்பாய் நானும் விண்மீனோடே விரைய விண்மீன் ஒரு இலக்கில் மோதிட நானும் மோத போகிறோம், நொறுக்கப்போகிறேன் என்று எண்ணுவதற்குள் குளிர்ச்சி மிகு நீர் நான் மூழ்கிக் கொண்டிருந்தேன்.

தத்திப் புத்தி கிழ் நோக்கி கைகளும் கால்களும் உதையவே
நீருக்குமேல் தலை நீட்டவே மின்னல் பளிச்சென்று புகைப்பிடிக்க இடியோசை கர்ஜித்தது,
" உன் உடல் பூமியிலே பத்திரமாக இருக்க நீ எப்படி இறக்கமுடியும்?
எழுந்துவா ஆன்மாவே! ",என்று.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jul-18, 1:42 am)
பார்வை : 959

மேலே