உனக்கும் எனக்கும்
உனக்கும் எனக்கும்
இடைவெளி
நூல் அளவு!!
உனக்கும் எனக்கும்
நெருக்கமானது
காதல்!!
உனக்கும் எனக்கும்
தொலைவிலுள்ளது
பிரிவு!!
உனக்கும் எனக்கும்
சொந்தமானது
அன்பு!!
உனக்கும் எனக்கும்
கிடைக்க கூடாதது
தனிமை!!
உனக்கும் எனக்கும்
கிடைக்க வேண்டியது
சேர்ந்தே மரணம்!!
நீயும் நானும்
உள்ளவரை
நம் காதலும்
சேர்ந்தே வாழும்
நம்முடன்...
நிஷா சரவணன்..