கலைஞனாம் கருணாநிதி

கலைஞனாம் கருணாநிதி
கவிஞனாம் கருணாநிதி
இவன் கருவுற்ற போதே
தமிழ் எனும் பனிகுடத்தில்
ஊறிப் பிறந்தவன்
தமிழின் வேரை பிடித்தவன்
மேடை பேச்சில் இவரை
மெச்சிக்க யாருண்டு
விண்ணையே முட்டும்
அளவிற்க்கு இந்த
மண்ணில் அவருக்கு
பேருண்டு....
"இதயத்தை கொடு அண்ணா"
என்றவர் தமிழன்னைக்காக
தன் இதயத்தையே
கொடுத்தவர் கருணாநிதி
தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான்
மிதப்பேன் அதில் நீங்கள்
ஏறி பயணம் செய்யலாம்
கவிழ்ந்து விட மாட்டேன்
என்றார் கருணாநிதி
தமிழர்களையும்
தமிழையும் தன்
உயிர் மூச்சாக கொண்டான்
எத்தனை எத்தனை
திட்டங்கள் வழங்கினார்
செயல்படுத்தினார்
சிறப்புற பணியாற்றினார்
தன் கால்கள் வலுவிழந்த போதும்
தன் எழுதுகோல் முனையில்
அப்போதும் தமிழுக்கு
தொண்டாற்றிக் கொண்டிருந்தார்
கருப்பு கண்ணாடி அணிந்த
காமராசர் அவர்
தன் விசாலமான பார்வையால்
தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் உள்ள
ஏழை எளிய மக்களுக்காக
போராடியவர் கருணாநிதி
என்னென்ன சொல்லி
உனக்கு புகழாரம் சூட்டிட முடியும்
உலக மொழிகளையெல்லாம்
ஒன்று திரட்டினாலும் கூட
வார்த்தைகள் பற்றாக்குறையாகிப் போகுமே!
சங்கத்தமிழ் எழுதிய தமிழன்
நெஞ்சுக்கு நீதி கொடுத்த போராட்டக்காரர்
கலைஞனே!
கடவுளிடம்
கருணை மனு தாக்கல்
செய்து
உன்னை திருப்பிக் கொடுக்க
சொல்லி தமிழகமே
அழுது புலம்பிக் கொண்டிருக்கிறது
உன் தொண்டர்களையெல்லாம்
நீ உடன்பிறப்பே என்றழைத்தாய்
எத்தனை அன்பும் அக்கரையும்
நீ உன் தொண்டர்கள் மேல்
கொண்டிருந்தால் அப்படி அழைத்திருப்பாய்
கண்ணீர் பொங்குதடா தமிழா!
எழுந்து வா தமிழா!
தமிழ் மாணிக்கமே! மீண்டு வா!
மரணத்தை வென்று வா.......!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Jul-18, 12:50 pm)
பார்வை : 170

மேலே