கனவு கண்டேன்.

ஆம் ! கனவு கண்டேன்,
நீர் சொன்னது போல்.

பள்ளிக்கூட பிஞ்சுகளை ,
பள்ளியறை பதுமைகளாய்,

கல்வி பெற அனுப்பி வைத்தால் ,
கலவி தரும் கொடூரர் - அவரை

கழுத்தருத்து வீதியிலே,மாந்தர்
பழுத்த இரும்பு கொண்டு
தண்டிப்பதாய் கனவு கண்டேன்!!!

வீட்டிற்கு பாரமென்றே ,பெண்கள்
நாட்டிலுள்ள வேலைகட்கு எத்தனிக்க,

நல்லோராய் நடித்தே, பெண்டிற்கு
வல்லூராய் கற்பழிக்கும் கயவர் தம்மை,

கரம் ஒடித்துக் கழுவேற்றி, உடலின்
சிரம் அகற்றி ,சிதையூட்டி
சீரழிப்பதாய் கனவு கண்டேன்!!!

தகுதி உளோர் பட்டினியால் வாடி நிற்க,
மிகுதியாய் அறிவிலிகள் ஆண்டிருக்க,

தன் குடும்பம் வாழ ,மக்கள்
பொன் வாழ்வை அழிக்கும் ஈனர்

தம்மை விடைகொடுத்து மனைக்கனுப்பும் ,
செம்மையான பணி நடந்து,மக்கள் மகிழ்வது போல் கனவு கண்டேன்!!!! கலாம் அய்யா ,நீங்கள் சொன்னது போல் கனவு கண்டேன்.....

எழுதியவர் : கு.ஹிதாயத்துர் ரஹ்மான் (28-Jul-18, 1:07 pm)
Tanglish : kanavu KANDEN
பார்வை : 111

மேலே