புதைந்த சிலை 8
திருவிழா நடக்குமோ நடக்காதோ என ஊர் மக்கள் தங்கள் மனதில் பெரும் கவலையுடன் இருந்தனர். அதிகாரி மோகினி வைஷ்ணவியை விசாரித்துவிட்டு பின் ஊர் தலைவர் அழைத்து வருமாறு கூறினார்.
ஊர்த்தலைவரும் வந்தார்.
இவரின் மோகினி தனது கேள்வியை தொடங்கினார். அன்று நீங்கள் எங்கே
சென்று இருந்தீர்கள்? என்று கேட்டு முடித்தவுடன், நான் வேலை விஷயமாக என் மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தேன் ஊர் வேலூர்.
சரி எத்தனை ஆண்டுகளாக இந்த ஊரில் இருக்கிறீர்கள்? என்று அதிகாரி மோகினி கேட்க
என் தாத்தா காலத்தில் இருந்து நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன் பதில் சொன்னார் ஊர்த்தலைவர்.
சரி என்ன வேலை பார்க்கிறீங்க?
அரிசி மண்டி வச்சிருக்கேன். அரிசி மண்டியில் இவ்வளவு பணம்!
இந்த ஊரிலே நீங்கதான் செல்வாக்காக இருக்கிறீர்கள் போல, என்று அதிகாரி கேள்வி கேட்க வேறு ஏதாவது தொழில் உண்டா என்று வினவினார்?
இல்லை இது மட்டும் தான். என் தாத்தா காலத்து சொத்து கொஞ்சம் இருக்கு என்று கூறி முடித்து விட்டார்.
சரி என்று சொல்லிவிட்டு ஊர் தலைவரையும் அனுப்பி விட்டார் அதிகாரி மோகினி.
இவர் பேசுவது தடுமாற்றமாக உள்ளது இவர் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறார் இது மட்டுமல்லாமல் இவரிடம் வேறு ஏதோ ஒரு தவறு இருக்கின்றது என்று நினைத்து ஊர் தலைவரின் தன் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார் அதிகாரி மோகினி.
அனைவரும் விசாரணைகள் முடிந்து விட்டது பொதுமக்கள் இரண்டு மூன்று நான்கு பேரிடம் பூசாரி குறி சொல்பவர் ஊர் தலைவர் ஆகியோர் பற்றி விசாரித்தார் மேலும் திருவிழா பற்றியும் இந்த கோவிலை பற்றியும் அதிகாரி மோகினி கேட்டறிந்து கொண்டார். அது மட்டுமில்லாது பக்கத்து ஊருக்குச் சென்று இரவு நேரங்களில் யாராவது திருடர் கூட்டங்கள் இருக்கின்றதா ஊருக்குள் யாராவது நுழைகின்றார்களா என்று கண்காணிக்க காவலர்களை நியமித்தார்.
மூன்று நாட்கள் முடிந்தது திருவிழாவிற்கு இன்னும் 18 நாட்கள் இருக்கின்றது.
திருவிழா நடக்குமா? சிலை கிடைக்குமா? யார் செய்தார்கள்?