மாய வலி அவள்

விசைப்பலகைப் போல
எந்தன் நினைவை
தொட்டு தொட்டு போனவள்
விசாலமாக எந்தன்
தனிமையை நிரப்பியவள்
வழுவழுப்பான கண்களால்
என்னை விழ வைத்தவள்
வலுவான காதலால்
என்னை எழ வைத்தவள்
நான் விழிக்காத நேரத்தை
கனவாக்கியவள்
நான் விழிக்கின்ற நேரத்தை
தனதாக்கியவள்
விரிந்த வேளையில்
என் இதயத்தில் புகுந்தவள்
அது சுருங்கவும் இடமளிக்காதவள்
ஆனால் எனக்கு நோகாமல்
எனக்குள் வாழ்பவள்
எனக்கெனவே சிரிப்பவள்
அவள் அவளே.....!
எந்தன் ஜீவநதியவள்....!!!
என் மாய வலி அவள்....!!!
என் தேயா நிலவவள்....!!!
என் தீரா காதலும் அவள்.........!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Jul-18, 10:07 pm)
பார்வை : 113

மேலே