அவள் விழியின் பார்வையும்,புன்னகையும்
மலரில் மது மகரந்தத்தில் மட்டுமே
பெண்ணே உன் பார்வையின் ஓரம்
நீ புன்னகைக்கையில் விரிந்தும் விரியாமல்
காணும் உன் செவ்விதழ்கள் ஓரத்திலும்
ததும்பி நிற்கும் மது தரும் கிளர்ச்சி
அப்பப்பா உன் முகத்தில் பூத்த
இரு மலர்களாய் காட்சி தருகிறதே
உந்தன் விழியும், செவ்விதழ்களும்
உன்னை நாடும் வண்டெனெக்கு !
பழரசங்கள் பலநாட்கள் புடம் செய்ய
'கிக்'தரும் மதுவாகிறது குடிப்பவர்க்கு
இது என்ன இயற்கையின் வினோதம்
இளமையில் மட்டுமே உன் விழிக்கு
பார்ப்பவரை இழுத்திடும் மதுவேந்தும்
மலர்விழி .............அதிலூரும் தேன்பார்வை!

