காதல் வெறும் கற்பனையல்ல

நீ அவிழ்த்திடும்
உடையினில்
அவிழ்ந்திடாது
என் ஆண்மை...
சிக்கலெல்லாம்
உனக்கும் சாவி
கிடைத்திடாத
நின்தன் மனமும்
நான் தேடிடும்
உன் பெண்மையும்...
தீண்டல்கள் இல்லாத
தேடல்களிலும் ஆயிரமுண்டு
நம் தேடல்களில்
தொட்டு தேடிட...?
நீ மட்டுமே...!
என் சகியே
ஓர் சூரியன்
ஒன்பது கிரகங்கள்
இந்த பால்வெளியில்
வேர் துலாவிகொண்டு...
இருக்கக்கூடும்
எங்கோ?
ஓர் அலகினில்
ஒரே ஒரு பூமி
அதை சுற்றும்
ஆயிரம் சூரியன்கள்...
ஆங்கே ஒவ்வொரு
சூரியனிலும் நூறு நிலாக்கள்
ஒவ்வொரு நிலாவின்
வேரிலும் நீயும் நானும்...
இருந்தும் இங்கே நீ
எங்கோ நான்...?

எழுதியவர் : சுரேஷ் குமார் (30-Jul-18, 11:15 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 225

மேலே