பெண் அழகு

அவள் மட்டுமே அழகு
சித்தரிக்கவில்லை உண்மையை
சொல்கின்றேன்

விழிக்குள் ஏனோ ஒரு காந்தம்
பிறைநிலவும் தோற்றுப்போனது அவள் புருவங்கள் ஏந்தி
அவள் கூந்தலின் அசைவில் தென்றல் காற்றும் தவழ்ந்து வந்தது
அவள் புன்னகைக்கும் அந்த ஒரு நொடியில் உலகமே உற்றுப் பார்த்தது.
பெண்ணோ அவள் பெண்ணோ
சிலைபோல் அவளைப் பார்த்தவர்கள்
சிறைப்பிடிக்க அவளைப் பார்த்தவர்கள்
கண் சிமிட்டாமல் அவளைப் பார்த்தவர்கள்
நினைக்கின்றார்கள்
கண்களைக் கவரும் தேவதை அவளோ
போர் தொடுத்து வென்றாலும் தவறில்லை அவளுக்காக....
அத்தனை அழகு பிரம்மன் செய்த படைப்பில்
இத்தனை அழகையும் கைப்பற்றுபவன் இவனோ என்று

எழுதியவர் : உமா மணி படைப்பு (31-Jul-18, 9:25 am)
சேர்த்தது : உமா
Tanglish : pen alagu
பார்வை : 479

மேலே