புத்தகக் காதல்
என் மடியில் உன்னை சாய்த்து
உன்னை பார்க்கும்போது இவ்வுலகில் நானில்லை
உன்னை பார்த்த சில நொடிகளிலே
நான் மயங்கும் காரணம் புரியவில்லை
உன்னை பார்க்காமல் பல நாட்கள் இருந்திருந்தும்
சில நாட்கள் நீயே கதியென இருந்ததை மறுப்பதற்கில்லை
உன்னை அதிகம் வேண்டும் அந்த மூன்று மணிநேரத்தில்
உன்னை என்னிடமிருந்து பிரிப்பது முறையல்ல
உன் மீது வைத்துள்ள காதலாலோ என்னவோ
உன்னை பார்க்க மீண்டும் வந்துள்ளேன்
தேர்வில் தோல்வியுற்று...
புத்தகமே!