அண்ணி

அண்ணி நீ மற்ற உறவுகளிலும்
மேம்பட்டவள் நீ தானே
எனோ அண்ணி என்றால் சண்டை கொள்ளும்
உறவு என்று நினைக்கையிலே
அவள் மறு தாய் என்று மறந்து விட்டேனே
தாய் என்னும் உறவு பிரிந்து செல்கையிலே
உனக்கு நான் இருக்கிறேன் என்று கூறும் உறவு நீ தானே
துன்பம் ஒன்று வருகையில்
உன்னிடம் முறையிட சொல்லியவளும் நீ தானே
நீ கொண்டு வந்த சீர் எல்லாம் எனக்கு உதவ கொடுத்தாய்
உனக்கு பிள்கைகள் இருந்தும் ஏனோ என்னை பிள்ளையாய் வளர்த்தாய்
இந்த குடும்பம் சிறக்க உனையே அர்பணித்தாய்.
நான் செய்த தவறிற்கு நீ தண்டனை ஏற்றாய்
என்னை திருத்த உன்னை வருத்தினாய்
உன்னை எப்படி ஏசினாலும்
என்னை விட்டு கொடுக்கவில்லை
உனை கண்டு வியந்தேன் ! மாறினேன் !
அண்ணியே இனியும் உனது
உறவு முறை மீண்டும் காணப்போவதில்லை
அண்ணியே ஒரு தோழியாய் கிடைக்கபோவதுமில்லை
என்ன தவம் தான் செய்வேனோ என் அண்ணியே
மீண்டும் இந்த உறவு கிடைக்க............................

எழுதியவர் : பிரகதி (30-Jul-18, 3:22 pm)
சேர்த்தது : அரும்பிசை
Tanglish : Annaie
பார்வை : 486

மேலே