பாசம்
பா னு வாசலில் இருந்த அழைப்புக்கு வாங்க வாங்க ....
இப்படி வரவேற்றார் முத்து வாசலில் நின்றிருந்தவர்களை , சார் நாங்க என்றவர்களை பேசாதடுத்து என்ன சாபிட்ரீங்க டி யா காபி யா சரி எங்க வீட்டு காபி நல்லாருக்கும் அலமு மூணு காபி கொண்டுவா அப்பறோம் என் பசங்க ரெண்டுபேரும் வெளிநாட்டுல வேலைல இருகாங்க பொண்ணு இங்க டவுன் ல குடுத்திருக்கோம் அவளுக்கு ஒரு பொண்ணு . நமக்கும் மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் சண்டை வந்து போயி மூணு வருஷம் ஆச்சு. பசங்களுக்கு பெரியனுக்கு ஒரு பையன் , சின்னவன் பொண்டாட்டி இப்போதான் அஞ்சு மாசம் அடடே வா அலமு இங்க வச்சுரு காபிய காபி கொண்டுவந்த மனைவிட்ட சொல்லிட்டு அடுத்த கணம் தொடர்ந்தார் முத்து காபி குடிங்க குடிச்சுட்டே பேசலாம் சொன்னவரை பார்த்து அலமு ஏங்க னு கூப்பிட குறளுக்கு பதில் சொல்ல பார்த்து மீண்டும் தொடர்ந்தார் ஏன் மா என்ன சமைக்கணும் கேக்குறிய இரு இப்ப தான காபி குடிக்கிறாங்க அட இன்னும் காபி குடிக்கலயா எடுத்து குடிங்க என்றார் வந்தவர்களை பார்த்து .. ஒரு நிமிட நிசப்தம் வந்தவர்களில் ஒருவர் பேச துவங்கினார் சார் நாங்க யார்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா ? அமைதிக்கு பின் முத்து இல்ல தெரியாது ... அப்பறோம் எப்படி எங்கள கூப்டு டீலாம் குடுத்து மதிய சாப்பாடு வரைக்கும் பேசுறீங்க அதுலயும் எங்க பேரு கூட கேக்கல அம்மா கூட நாங்க யார்னு கேக்கவந்துருப்பாங்க போல அவங்களையும் பேசவுடாம பேசிட்டிங்க னு வர ஒரு நிமிஷம் னு தடுத்தார் முத்து இப்போ என்ன சொன்னிங்க , புரியல சார் இல்ல இப்போ பேசும்போது இடைல ஒரு வார்த்த சொன்னிங்களே எது னு வந்தவர் கேட்க அதாங்க அலமுவ என்ன சொன்னிங்க அம்மா னு சொன்னேன். அந்த ஒரு உறவு தாங்க நாங்க எப்பவும் எங்க வீட்டுக்கு பசங்க வருவாங்க வருவாங்க னு வாசலே பாத்து ஏங்குவோம் நீங்க இன்னிக்கு வந்தோன அவர்க்கு தான் பசங்க வந்துட்டதாவே நெனச்சு கூப்டாரு என்று முடித்தார் அலமு .அது சரிங்க நாங்க நாங்க அவரு பசங்க இல்லனு பாத்தோன தெரிஞ்சுஇருக்கும் ஆனாலும் எப்படி னு கேக்காம கேட்டவர்க்கு முத்து சொல்ல ஆரம்பித்தார் இம் எனக்கு சக்கரை நோயின் காரணமா போன வருஷம் கண் பார்வை போச்சு உங்கள பாக்க முடியாது நாளும் உங்க
அப்பா என்ற அழைப்பு என் பசங்கள பாக்கணும் தோணுச்சு அதன் உங்களையே வந்த என் பசங்களா நெனச்சு கூப்டு பேசுனேன் சொல்ல இதுவரை கேம்பிரித்தவர் குரல் தாதுப்புவதை பார்த்து பாசத்திற்கான ஏக்கம் என்று உணர்த்தவர்களாய் வந்தவர்கள் ஒரு மித்து சொன்னார்கள் அப்பா நாங்களும் உங்க பசங்க தான் .......
இப்டி பாசத்திற்கு ஏங்கும் பல முத்துவும் அலமுவும் இருக்க தான் செய்கிறார்கள் முடிந்தவரை அருகில் உள்ள முதியவரிடம் அன்பு செய்வோம் ........................
இது எனது புது முதல் படைப்பு நிறை இருப்பின் மகிழுங்கள்
குறை இருப்பின் என்னிடம் பகிருங்கள்