எது வளர்ச்சி

ஒரு அழகான சமவெளி, அதை சுற்றிலும் அரண் போல் வானுயர்ந்த மலைகள், கிணற்று தவளைகள் போல் வெளி உலகம் தெரியாத, தனக்கு தெரிந்த கலைகளைக் கொண்டு செழிப்புடனும் அன்புடனும்ஒற்றுமையுடனும் கூடி வாழும் மக்கள். விவசாயம் ஒன்றே அவர்கள் செய்யும் தொழில், செழிப்பான பூமி என மகிழ்ச்சியுடன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். காலங்கள் பல கடந்து சென்றும், அந்த மலையை தாண்டி வெளியுலக மக்களோடு தொடர்பு கொள்ளாமல் இருந்ததோடு யாரையும் தங்கள் பகுதிகளுக்குள் அனுமதிக்காமலே வாழ்ந்தனர்.
மறுபுறம் வளர்ச்சி அடைந்த உலகம் அறிவார்ந்த மக்கள், என்னற்ற போர்கள், போட்டிகள், பொறமைகளைத் தாண்டி நகர மக்கள் பலவகைகளிலும் முன்னேற்றம் அடைந்திருந்தனர்.இருப்பினும் வளர்ச்சியில், தேவைகளை பூர்த்தி செய்வதில் அவர்கள் காட்டிய தீவிரம் , இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் காக்க, சிறு முயற்சியை கூட செய்யவில்லை அதனால் அடுத்த ஐம்பது வருடங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. இளம் தலைமுறையினர் விவசாயம் என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு அடியோடு அதை மறந்து விட்டனர். அனைவரும் இயற்கைக்கு மாறாக செயற்கை மற்றும் மரபனு மாற்றப்பட்ட உணவுகளையும்,அதிகமாக அசைவ உணவுகளையும் உண்டனர். இதனால் ஏகபட்ட நோய்கள் புதிது புதிதாக வந்து மனிதனின் சராசரி ஆயுள் காலம் குறைய தொடங்கியது.
மறுபுறம் சமவெளி மக்கள் இயற்கையோடு இனைந்து ஆரோக்கியமாக நீன்ட நாட்கள் வாழ்ந்தனர். மேலும் விவசாயத்திலும், சற்றுசூழலை பாதுகாப்பதிலும் பல வகையில் முன்னேற்றம் கண்டனர்.
ஆண்டுகள் செல்ல செல்ல நகர மக்கள் வாழும் சுற்றுச்சூழல் மாசுபட்டு வாழ முடியாத சூழல் உருவானது. அம்மக்கள் தாங்கள் எந்த மாதிரியான உலகில் வாழ்கிறோம் என்பதை உணர தொடங்கினர். மேலும் எண்ணற்ற வளர்ச்சிகள் கண்டபோதும் தாம் வாழும் சூழல் பாலைவனமாகவே மாறி இருப்பதை உணர்ந்தனர்.
பலர் இயற்கையைத் தேடி ஓட ஆரம்பித்தனர், சிலரோ சுயநல நோக்கத்தோடு அவர்களின் லாபத்திற்காக மக்களின் மனதை மாற்ற முற்பட்டனர். பல்வேறு விதமான நோய்களையும் இன்னல்களையும் அனுபவித்த மக்கள் அந்த கயவர்களின் அறிவுறையை கேடகாமல் புதிய பூமியை, இயற்கை வளமிக்க பூமியை உருவாக்க கிளம்பினர்.
இயற்கை வளங்கள் மொத்தமும் அழிந்து விட்ட நிலையில் புதியதோர் உலகை உருவாக்க சமவெளி மக்களின் உதவியை நாடினர், அவர்களும் உதவினர். நகர மக்கள் பலவிதமான விதைகளையும் மரக்கன்றுகளையும் சமவெளி மக்களிடம் இருந்து பெற்றனர். அடுத்த 150 வருடங்கள் மக்கள் விவசாயத்திலும் இயற்கை வளத்தை பெருக்குவதிலும் தங்கள் அறிவையும் ஆற்றலையும் உபயோகித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர் தொடர்ந்து அதை பாதுகாத்தும் வந்தனர்.
இக்கதையில் இருந்து நான் கூற வருவது வளர்ச்சியை சுயநலத்திற்கும் தனிமனித சுரண்டளுக்கும் உபயோகிப்பதை விட சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் இயற்கையை பாதுகாப்பதற்கும் பயன்படுத்தினால் நம் மனிதசமுதாயம் நலம் பெறும்.

அன்பை வழங்குவோம் .. அன்பை பெறுவோயம்...

எழுதியவர் : அரவிந்த் விஜய் (31-Jul-18, 3:47 pm)
Tanglish : ethu valarchi
பார்வை : 333

மேலே